Friday, April 4, 2025
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஊக்குவிப்பு கொடுப்பனவு: சுற்றுநிருபம் வெளியீடு

ஊக்குவிப்பு கொடுப்பனவு: சுற்றுநிருபம் வெளியீடு

வணிக கூட்டுத்தாபனங்கள், நியதிச்சட்ட சபைகள் மற்றும் அரச நிறுவனங்களின் ஊழியர்களுக்கு ஊக்குவிப்பு கொடுப்பனவை வழங்குவதற்கான சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளது.

திறைசேரியின் செயலாளர் மகிந்த சிறிவர்தனவின் கையெழுத்துடன், குறித்த சுற்றுநிருபம் வெளியாகியுள்ளது.

ஊழியர்களுக்கான ஊக்குவிப்பு கொடுப்பனவு திறைசேரியின் நிதியில் இருந்து வழங்கப்படமாட்டாது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், கடந்த வருடத்தில் வரி அறவீட்டினால் கிடைக்கப்பெற்ற இலாபத்தில் 30 சதவீதத்தை கூட்டு நிதியத்திற்கு செலுத்திய நிறுவன ஊழியர்களுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், இலாபம் ஈட்டாத நிறுவனங்களின் ஊழியர்களுக்கு ஊக்குவிப்பு கொடுப்பனவு வழங்கப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles