Wednesday, April 30, 2025
27 C
Colombo
செய்திகள்உள்நாட்டுVAT வரிக்குட்படாத பொருட்களின் பட்டியல் வெளியானது

VAT வரிக்குட்படாத பொருட்களின் பட்டியல் வெளியானது

ஜனவரி முதலாம் திகதி முதல் VAT வரிக்குக்கு உட்படாத பொருட்களின் பட்டியலை உள்நாட்டு வருவாய் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, எரிபொருள், குழந்தைகளுக்கான பால்மா, கோதுமை மா, அரிசி, அரிசி மா மற்றும் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பாண் ஆகியவை அந்த பொருட்களில் அடங்கும்.

மேலும், உள்ளூர் ஆடை உற்பத்தி, கல்விச் சேவைகள்,பொதுப் பயணிகள் போக்குவரத்துச் சேவைகள், மின்சார விநியோகம், அடக்கம் மற்றும் தகனம் செய்யும் சேவைகள், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் குடிவரவு கவுண்டருக்கு அப்பால் உள்ள உணவகச் சேவைகள், வெளிநாட்டுத் தூதரகங்கள் மற்றும் இராஜதந்திரிகளுக்கான பொருட்கள் மற்றும் சேவைகளும் அதில் அடங்குகின்றது.

பேரிடர் நிவாரணத்திற்காக வெளிநாட்டு நிறுவனங்களால் நிதியளிக்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகள், பல்வேறு பிரிவுகளின் கீழ் நிதிச் சேவைகள், மருத்துவமனை அறைக் கட்டணங்கள் தவிர சுகாதாரச் சேவைகள், பதப்படுத்தப்படாத விவசாயம், மீன்வளப் பொருட்கள் மற்றும் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கைத்தறி ஜவுளி ஆகியவை ஏயுவுக்கு உட்பட்ட பொருட்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles