Saturday, May 3, 2025
26 C
Colombo
செய்திகள்உள்நாட்டு3 மாணவிகளை வன்புணர்ந்த ஆசிரியர் கைது

3 மாணவிகளை வன்புணர்ந்த ஆசிரியர் கைது

நுவரெலியா மாவட்டத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் 9ஆம் தரத்தில் கல்வி கற்கும் மூன்று மாணவிகளை துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிதுல்லே, பல்லேதோவ பிரதேசத்தை சேர்ந்த 29 வயதுடைய திருமணமான ஆசிரியர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நுவரெலியா மாவட்டத்தின் வலப்பனை கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலை ஒன்றின் 9ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் மூவரை பாடசாலையின் ஆய்வு கூடத்தில் வைத்து துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாரின் விசாரணைகளின் போது குறித்த நபர், 9ஆம் வகுப்பு ஆசிரியர் எனவும், அவர் விஞ்ஞான பாடத்தை கற்பிப்பவர் எனவும் தெரியவந்துள்ளது.

இவரது மனைவியும் ஆசிரியை என கூறப்படுகிறது.

குறித்த ஆசிரியர், மேற்படி மாணவிகளில் ஒருவருடன் காதல் உறவில் ஈடுபட்டு அந்த மாணவி மூலம் மற்ற இரு மாணவிகளை துஷ்பிரயோகம் செய்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

வட்ஸ்அப் மூலம் மாணவி ஒருவரின் நிர்வாண புகைப்படங்களை கேட்டு இந்த ஆசிரியர் கட்டாயப்படுத்தியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட ஆசிரியர் இன்று (21) வலப்பனை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

குறித்த பாடசாலை மாணவிகள் மூவரும் சட்ட வைத்திய பரிசோதனைக்காக ரிக்கில்லகஸ்கட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles