Friday, July 4, 2025
31.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவட்ஸ் அப் மூலம் போதைப்பொருள் வர்த்தகம்: விசாரணையில் அம்பலம்

வட்ஸ் அப் மூலம் போதைப்பொருள் வர்த்தகம்: விசாரணையில் அம்பலம்

யாழ்ப்பாணத்தில் வட்ஸ் அப் செயலி ஊடாக போதை பொருள் வியாபாரம் நடைபெற்று வந்தமை பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

யாழ்ப்பாணம் புறநகர் பகுதியில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்தனர் என்ற குற்றச்சாட்டில் கைதானவர்களில் இருவரை பொலிஸார் நீதிமன்ற அனுமதி பெற்று தடுப்பு காவலில் வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

அதன் போதே சந்தேகநபர்கள் வட்ஸ் அப் செயலி ஊடாக மாணவர்களுடன் தொடர்புகளை பேணி, போதைப்பொருட்களை விற்பனை செய்து வந்தமை கண்டறியப்பட்டுள்ளது

அந்நிலையில் சந்தேகநபர்களின் தொலைபேசிகளை பறிமுதல் செய்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அதன் அடிப்படையில் பல மாணவர்கள் இவர்களுடன் தொடர்புகளை பேணி வந்துள்ள நிலையில் அவர்களை இனம் காணும் நடவடிக்கையையும் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles