Friday, January 17, 2025
28.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபோலி விசா தயாரித்த அலுவலகம் சுற்றிவளைப்பு

போலி விசா தயாரித்த அலுவலகம் சுற்றிவளைப்பு

போலி வெளிநாட்டு கடவுச்சீட்டுகள், விசாக்கள் மற்றும் அனுசரணை கடிதங்கள் தயாரிக்கும் பன்னல பிரதேசத்தில் உள்ள வீடொன்றின் நிலக்கீழ் அலுவலகம் ஒன்று நேற்று (20) சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

பொலிஸ் விசேட அதிரடிப்படை மற்றும் கட்டுநாயக்க குடிவரவு குடிவரவு திணைக்களத்தின் எல்லைக் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள் குழுவினால் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது போலி ஆவணங்கள் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட இயந்திரங்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விமானப்படை புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், பன்னல, அலபடகம பகுதியில் உள்ள இந்த வீட்டை சோதனை செய்தபோது குறித்த அலுவலகம் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த அச்சகத்தில், வெளிநாடுகளால் வெளியிடப்பட்ட உயர்தர அச்சிடும் கருவிகள், பல்வேறு நாடுகளின் உத்தியோகபூர்வ முத்திரைகள் மற்றும் இலங்கை குடிவரவுத் திணைக்களத்தைப் போன்றே பதிவு செய்யக்கூடிய பிரிண்டர்கள் மற்றும் பல நவீன இயந்திரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த அச்சகத்தின் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த 22 மற்றும் 23 வயதுடைய இரு இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இரு இளைஞர்களும், அச்சகத்தில் இருந்த அச்சு உபகரணங்கள் மற்றும் இயந்திரங்களும் மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு கிருலப்பனையில் உள்ள குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles