வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப் படுத்தும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று சந்திக்கவுள்ளார்.
இன்று மாலை 3 மணியளவில் இந்த சந்திப்பு இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் இந்த சந்திப்பில் தாம் கலந்து கொள்ளப்போவதில்லை என்று வடமாகாண முன்னாள் முதலமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே இடம்பெற்ற கலந்துரையாடல்களில் இணக்கம் காணப்பட்ட விடயங்கள் இன்னும் அமுலாக்கப்படாத நிலையில், தாம் அதில் கலந்துக் கொள்ளப்போவதில்லை என்று அவர் அறிவித்துள்ளார்.