பிரபல பாடகர் சாமர வீரசிங்க நேற்று (20) வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சுவாசக் கோளாறு காரணமாக அவர் சிகிச்சைக்காக தென் கொழும்பு போதனா வைத்தியசாலையில் (களுபோவில) அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சாமர வீரசிங்க கடந்த சில நாட்களுக்கு முன்பு சுகவீனமுற்றிருந்ததாக அவர் தனது முகநூல் கணக்கில் பதிவிட்டிருந்தார்.
வைத்தியசாலையில் உள்ள சாமர வீரசிங்கரவ பார்ப்பதற்காக தற்போது பெருமளவான மக்கள் வைத்தியசாலைக்கு வந்து செல்வதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதால்,அவரை தற்போதைக்கு பார்க்க வர வேண்டாம் என மருத்துவமனை பேச்சாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.