கிறிஸ்தமஸ் காலத்தில் கேக் விற்பனை 50% ஆல் வீழ்ச்சியடைந்துள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
நாட்டில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடியே அதற்கு பிரதான காரணம் என அந்த சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
கடந்த வருடங்களில் கிலோ கணக்கில் கேக்கை கொள்வனவு செய்த வாடிக்கையாளர்கள் இம்முறை அதனை 250 கிராம் வரை மட்டுப்படுத்தியுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.