Friday, January 17, 2025
24.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டு'அலுபோமுல்லே பிங்கி' கைது

‘அலுபோமுல்லே பிங்கி’ கைது

கட்டாருக்கும் இலங்கைக்கும் இடையிலான பாரிய போதைப்பொருள் வர்த்தகத்தின் சூத்திரதாரியான ‘அலுபோமுல்லே பிங்கி’ கைது செய்யப்பட்டுள்ளார்.

அலுபோமுல்ல- மஹா பெல்லன மற்றும் பண்டாரகம ரம்புக்கன பிரதேசங்களில் வசிக்கும் மூவர் மேலும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பிரதான சந்தேகநபர் தொழில் ஏதும் இல்லாதவர் எனவும், சொகுசு வீடு மற்றும் பல கார்களை பயன்படுத்தி சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவதாகவும், மூன்று மாடி கட்டிடங்கள் உட்பட பல சொத்துக்களுக்கு சொந்தக்காரர் எனவும் பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

அதன்படி செயற்பட்ட பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சந்தேக நபரை பொலிஸாரிடம் அழைத்து வந்து சுமார் 2 மணிநேரம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட போது சந்தேக நபரின் கைத்தொலைபேசிக்கு நிறைய குறுஞ்செய்திகள் வந்ததாகவும், அதன்படி கைப்பேசி சோதனை செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைப்பேசியை பரிசோதித்தபோது, ​​கட்டார் மற்றும் இலங்கையில் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான போதைப்பொருள் புகைப்படங்கள், பணப் பரிவர்த்தனை ரசீதுகள், தொலைபேசி உரையாடல்கள், கூகுள் வரைபடங்கள் உள்ளிட்ட பல தகவல்கள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்படி சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட நீண்ட விசாரணைகளின் போது தெரியவந்த தகவலின் அடிப்படையில் கடத்தலில் ஈடுபட்ட ஏனைய சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களிடம் இருந்து 22 கிராம் ஹெரோயின், சொகுசு கார், இரண்டு முச்சக்கரவண்டிகள்இ மோட்டார் சைக்கிள், கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் வங்கிக் கணக்குகள் ஆகியவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

சந்தேக நபர்களின் வங்கிக் கணக்குகளை ஆய்வு செய்ததில், ஓராண்டு காலத்துக்குள் 15 கோடி ரூபாவுக்கு மேல் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் விசேட போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles