தற்போது பெய்து வரும் கடும் மழை காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஹல்துமுல்ல கலுபான (இரண்டு பாலங்களுக்கும் அருகில்) இன்று (19) அதிகாலை மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
இந்த மண்சரிவினால் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.