கடந்த நவம்பரில் 10 சிறுமிகள் கர்ப்பமடைந்துள்ளதாக பொலிஸ் அறிக்கையின்படி தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் பிரகாரம் சிறுமிகள் மற்றும் சிறுவர்கள் அதிகளவில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாவது தெரியவந்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதய குமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன், சிறுமிகள் தாயாக மாறுவது பாரிய சமூக மற்றும் சட்டப் பிரச்சினையாக மாறியுள்ளதாகவும், கடந்த வருடத்தில் 2000 சிறுமிகள் தாய்மார்களாக பதிவாகியுள்ளதாகவும் அவர் வலியுறுத்தினார்.
இந்த துரதிர்ஷ்டவசமான சூழ்நிலையிலிருந்து குழந்தைகளைக் காப்பாற்ற, அவர்களுக்கு பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் அதைத் தடுப்பது குறித்து நல்ல அறிவை வழங்க வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.