வீடுகளுக்கு பொருத்தப்படும் சூரிய படலங்களின் விலை அதிகரிக்கப்படும் என இலங்கை தேசிய வர்த்தக சம்மேளனத்தின் செயலாளரான லக்மால் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, சூரிய படலங்களின் விலை சுமார் இரண்டு இலட்சம் ரூபா வரை அதிகரிக்கும் என அவர் குறிப்பிட்டார்.
அடுத்த வருடம் ஜனவரி முதலாம் திகதி முதல் இந்த விலை அதிகரிப்பு அமுலாகவுள்ளது.
சூரிய படலங்களின் தொகுப்பிற்கு 18% VAT விதிக்கப்பட்டதே இதற்கு காரணம் என அவர் சுட்டிக்காட்டினார்.