Friday, April 17, 2026
27.2 C
Colombo
செய்திகள்உலகம்சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 111 பேர் பலி

சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 111 பேர் பலி

வடமேற்கு சீனாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 111 பேர் உயிரிழந்துள்ளதுடன், 200 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

நேற்றிரவு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சீன அரச ஊடகம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க புவியியல் ஆய்வு நிறுவனம் முன்னதாக, அப்பகுதியில் 5.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியதாக கூறியது.

நிலநடுக்கத்தின் மையம் சீனாவின் லான்ஜோவிலிருந்து மேற்கு-தென்மேற்காக 102 கிலோமீட்டர் தொலைவில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இதன்படி நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் முன்னெடுக்கப்படுவதாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles