ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் தலைவரும், நாட்டின் போதைப்பொருள் வலையமைப்பை நடத்தும் சக்திவாய்ந்த போதைப்பொருள் கடத்தல்காரருமான ‘கெசெல்வத்த தினுக்க’வின் உதவியாளர் ஒருவர் ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பதில் பொலிஸ் மா அதிபர் தேஷபந்துவின் பணிப்புரைக்கமைய, நேற்று (18) நடத்தப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
40 கிராம் ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த கொழும்பு 12 ஐச் சேர்ந்த 41 வயதுடைய ஒருவரே இவவாறு
கைது செய்யப்பட்டுள்ளார்.