Friday, May 10, 2024
27 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇலங்கையின் அழகை காட்டும் காணொளியை வெளியிட்டார் Nas Daily

இலங்கையின் அழகை காட்டும் காணொளியை வெளியிட்டார் Nas Daily

நாஸ் டெய்லி (Nas Daily) என்ற யூடியூபர், இலங்கையின் அழகை வெளிப்படுத்தும் வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

அவர் முன்பு உருவாக்கிய ஆயிரக்கணக்கான வீடியோக்களின் தொகுப்பின் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானார்…

அவற்றுள் This is Made of Poop, My Biggest Money Mistake, The Key Board Warrior என இலங்கையைப் பற்றிய மூன்று வீடியோக்களும் சமூக வலைதளத்தில் உள்வாங்கப்பட்டிருந்தன.

மேலும், 2020 ஆம் ஆண்டில், Nas Daily, கொவிட் தொற்றுநோய் காலத்தில் இலங்கையை மிகவும் தாராளமான நாடாகப் பெயரிட்டு வெளியிடப்பட்ட வீடியோவும் பலரின் அன்பை வெல்ல முடிந்தது.

இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிரபல சர்வதேச Vloger ‘Nas Daily’ இலங்கை சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக தனது முதல் காணொளியை இன்று சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளார்.

அந்த காணொளியை சமூக வலைதளங்களில் வெளியிட்ட அவர், அழகிய கலாசாரம் மற்றும் அழகான மனிதர்களை கொண்ட உலகில் எனக்கு மிகவும் பிடித்தமான நாடுகளில் இலங்கையும் ஒன்று என குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையில் Nas Daily மூன்று விசேட காணொளிகளை வெளியிடவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.

Keep exploring...

Related Articles