Friday, June 26, 2026
28.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டு10 மில்லியன் முட்டைகள் சந்தைக்கு

10 மில்லியன் முட்டைகள் சந்தைக்கு

இறக்குமதி செய்யப்பட்ட 10 மில்லியன் முட்டைகளை இன்று (18) முதல் சந்தைக்கு வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் அனுமதியுடன் உரிய முட்டைகள் லங்கா சதொச நிறுவனத்திற்கு இன்று முதல் விநியோகிக்கப்பட உள்ளதாக அரச வர்த்தக இதர சட்டக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இதன்படி, சதொச ஊடாக மக்கள் பண்டிகைக் காலங்களில் முட்டைகளை தட்டுப்பாடு இன்றி கொள்வனவு செய்ய முடியும்.

இதேவேளை, மேலும் 15 மில்லியன் இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள் இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ளதுடன், அந்த கையிருப்புகளை விரைவில் தர பரிசோதனைக்கு அனுப்பவும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles