Wednesday, April 30, 2025
29.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதப்பிச் சென்ற இரு கைதிகள் சிக்கினர்

தப்பிச் சென்ற இரு கைதிகள் சிக்கினர்

அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் இரு கைதிகள் அங்குணகொலபெலஸ்ஸ வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்ட போது தப்பிச் சென்றுள்ளனர்.

தப்பியோடிய இருவரும் தனமல்வில, சர்வோதய பிரதேசத்தில் அமர்ந்திருப்பதாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் வலஸ்முல்ல பிரதேசத்தை சேர்ந்த 30 மற்றும் 32 வயதுடையவர்கள் எனவும், அவர்கள் கொள்ளை மற்றும் வெடிகுண்டுகளை வைத்திருந்தமை உள்ளிட்ட பல குற்றங்களுக்காக சிறைத்தண்டனை பெற்றவர்களாவர்.

சந்தேகநபர்கள் இருவரும் வெல்லவாய நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தனமல்வில பொலிஸ் நிலைய அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles