Friday, January 17, 2025
24.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசிறுமியை வன்புணர்ந்து படமாக்கிய இரு மாணவர்கள் கைது

சிறுமியை வன்புணர்ந்து படமாக்கிய இரு மாணவர்கள் கைது

பாடசாலை மாணவிகள் மற்றும் உயர்கல்வி பயிலும் யுவதிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்து அவர்களது நிர்வாண காட்சிகளை பதிவு செய்து இணையத்தில் வெளியிட்ட இரண்டு பாடசாலை மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கண்டியில் உள்ள பிரதான பெண்கள் பாடசாலையொன்றில் கல்வி கற்கும் 15 வயதுடைய மாணவி மற்றும் அவரது தாயார் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் இரு மாணவர்களும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் கண்டி நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் ஜனவரி முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

தனது காதலனுடன் கண்டியில் உள்ள விடுதியொன்றிற்கு சென்றதாகவும், காதலன் வழங்கிய பானத்தை குடித்த பின், சுயநினைவை இழந்ததாகவும் அதன் பின்னர் என்ன நடந்தது என தமக்கு நினைவில் இல்லை என சிறுமி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட இரு மாணவர்களில் ஒருவருடன் புகார் அளித்த மாணவி காதல் உறவில் இருந்துள்ளார். குறித்த மாணவியை அவரது வீட்டில் வைத்து பல தடவைகள் அவர் பலாத்காரம் செய்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

பின்னர், உறவை விட்டு விலகிய சிறுமி, சில நாட்களின் பின்னர், மற்றுமொரு மாணவர் தனது தொலைபேசிக்கு தொடர்ந்து குறுஞ்செய்திகளை அனுப்பி தனது காதலை வெளிப்படுத்தியதாக சிறுமி தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அந்த பெண் தனது முன்னாள் காதலனிடம் கூறியபோது, தானும் ​​புதிய உறவில் இருந்ததால், மாணவிக்கு பிடித்ததை செய்யுமாறு கூறியுள்ளார்.

அதன் பின்னர் குறுஞ்செய்தி அனுப்பிய மாணவனுடன் காதல் உறவை ஆரம்பித்த மாணவி, உறவை ஆரம்பித்த சிறிது காலத்துக்கு பின்னர், சிறுமியை தனியார் வகுப்பு முடிந்து வீட்டில் விடுவதாக கூறி குறித்த மாணவன் முச்சக்கரவண்டியில் அழைத்துச் சென்றுள்ளார்.

அப்போது, ​​காதலன் சிறுமியை கண்டியில் உள்ள விடுதியொன்றுக்கு அழைத்துச் சென்று, சிறுமியை போதையாக்கி பாலியல் பலாத்காரம் செய்து, நிர்வாணக் காட்சிகள் வீடியோவில் பதிவு செய்துள்ளார்.

அதன் பிறகு அந்த காட்சிகள் மாணவியின் கைப்பேசிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், அதன்பின்னர் பலமுறை மேற்படி விடுதிக்கு சிறுமியை அழைத்துச் சென்று பலாத்காரம் செய்தது பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அவரது முதல் காதலனும் இதில் தொடர்புபட்டுள்ளதுடன், மாணவியின் நிர்வாணப் படங்களை தனது நண்பர்களுக்கு அனுப்பியுள்ளதுடன், இணையத்திலும் வெளியிட்டுள்ளார்.

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட மாணவர் ஒருவரின் கைப்பேசியில், அவரால் வன்புணரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பாடசாலை மாணவிகள் உட்பட பல யுவதிகளின் நிர்வாண காணொளிகள் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இணையத்தில் வெளியாகியிருந்த இந்த நிர்வாணக் காட்சிகள் அடங்கிய காணொளி, மாணவி கல்வி கற்கும் கண்டி மகளிர் கல்லூரியின் பார்வைக்கு சென்றுள்ளதுடன், மாணவியை பாடசாலையில் இருந்து விலக்க பாடசாலை நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த காணொளிகள் பணம் பெற்று இணையத்திற்கு அனுப்பப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கும் பொலிஸார், இது தொடர்பில் கண்டறிய விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles