Friday, January 16, 2026
22.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசரிகமப நிகழ்ச்சியில் வெற்றி வாகை சூடினார் கில்மிஷா!

சரிகமப நிகழ்ச்சியில் வெற்றி வாகை சூடினார் கில்மிஷா!

தமிழகத்தில் பிரபல தனியார் தொலைக்காட்சி நடத்திய சரிகமப இசை நிகழ்ச்சியில் இலங்கையை சேர்ந்த சிறுமி கில்மிஷா யாழிசை வெற்றி வாகை சூடியுள்ளார்.

நேற்றைய தினம் இறுதிப் போட்டி சென்னை நேரு உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் இந்தியாவின் ரியாலிட்டி நிகழ்ச்சி ஒன்றில் முதல் இடத்தை பெற்ற முதல் இலங்கையர் என்ற பெருமையை கில்மிஷா தனதாக்கிக்கொண்டார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஆரம்பமான சரிகமப இசை நிகழ்ச்சியில் இலங்கையை சேர்ந்த இருவர் கலந்துகொண்டனர்.

மலையகத்தைச் சேர்ந்த அஷானி மற்றும் கில்மிஷா ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தமது திறமைகளை வெளிப்படுத்தினர்.

இவர்களில் கில்மிஷா இறுதிப் போட்டிக்கு தெரிவாகியிருந்ததுடன், அஷானி இறுதித் தருணத்தில் போட்டியில் இருந்து வெளியேறினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles