Thursday, January 15, 2026
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவிமான நிலைய ஊழியர்கள் போராட்டம்

விமான நிலைய ஊழியர்கள் போராட்டம்

கட்டுநாயக்க விமான நிலைய ஊழியர்கள் இன்று (15) பிற்பகல் விமான நிலையத்தின் வருகை முனையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சம்பள உயர்வை கோரி அவர்கள், இன்று (15) மதிய உணவு நேரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

விமான நிலைய கூட்டு தொழிற்சங்கத்தினால் இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

6 வருடங்களாக விமான நிலைய ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படவில்லை என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு முன்னர் தமது கோரிக்கைக்கு நியாயமான தீர்வு கிடைக்காவிடின் 2024 ஜனவரி 03 ஆம் திகதி முதல் பாரிய தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles