Wednesday, April 30, 2025
27 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமகளை வன்புணர உதவிய தந்தை கைது

மகளை வன்புணர உதவிய தந்தை கைது

மொனராகலை பிரதேசத்தில் தன்னுடைய மகளை துஷ்பிரயோகம் செய்வதற்கு உதவிய குற்றச்சாட்டின் பேரில், அச்சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹம்பேகமுவ பொலிஸ் பிரிவில் வசிக்கும் குறித் தசிறுமி (15) வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

அதற்கு உதவிய குற்றச்சாட்டிலேயே, பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தையை ஹம்பேகமுவ பொலிஸாரால் கடந்த 13ஆம் திகதியன்று கைது செய்துள்ளனர்.

இக்குற்றச் சம்பவம் 2023 நவம்பர் 28ஆம் திகதியன்று இடம்பெற்றுள்ளது.

சிறுமியின் காதலனை அழைத்துச் சென்று கணவன் மனைவியாக வாழ்வதற்கு அவர்களுக்கு ஊக்குவித்த குற்றஞ்சாட்டிலேயே சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுமியும் அதே பகுதியில் வசிக்கும் இளைஞனும் பொலிஸாரால் முன்னர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தனர்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட ஹம்பேகமுவ பொலிஸார், மகளை பலாத்காரம் செய்ய ஊக்குவித்தார் என்றக் குற்றச்சாட்டில் அச்சிறுமியின் தந்தையை கைது செய்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles