நாடளாவிய ரீதியில் வனஜீவராசி அதிகாரிகள் எதிர்வரும் 18ஆம் திகதி சுகயீன விடுமுறையை அறிவித்து ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அகில இலங்கை ஐக்கிய வனஜீவராசி அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
வனஜீவராசி அதிகாரிகளின் பாதுகாப்பை உறுதி செய்தல், வனஜீவராசி அதிகாரிகளின் சேவையை மதிப்பீடு செய்யாமை உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து இந்த ஒரு நாள் பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுவதாக அந்த சங்கத்தின் தலைவர் பிரபாஷ் கருணாதிலக்க தெரிவித்தார்.
பணியில் இருந்த 85 வனஜீவராசி உத்தியோகத்தர்கள் உயிரிழந்துள்ளதாகவும் அவர்களில் 23 பேர் யானை தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.