ஜப்பானிய அமைச்சர்கள் நான்கு பேர் தமது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.
நிதி சேகரிப்பு சம்பவமொன்றில் இவர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நால்வரும் ஜப்பானிய அரசாங்கத்தின் சக்திவாய்ந்த அமைச்சர்கள் என்பதுடன், ஊழல் குற்றச்சாட்டுகளால் ஃபோமியோ கிஷிடாவின் அரசாங்கத்தின் பிரபலமும் குறைந்து வருவதாகக் கூறப்படுகிறது.
இந்த அமைச்சர்கள் சுமார் 5 வருடங்களாக 500 மில்லியன் யென் தொகையை ஏனைய கணக்குகளில் வைப்பிலிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பாக சிறப்பு விசாரணையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.