Friday, January 17, 2025
24.3 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஜனவரி முதல் நீர் கட்டணத்துக்கு சூத்திரமொன்று அறிமுகப்படுத்தப்படும் - அமைச்சர் ஜீவன்

ஜனவரி முதல் நீர் கட்டணத்துக்கு சூத்திரமொன்று அறிமுகப்படுத்தப்படும் – அமைச்சர் ஜீவன்

எதிர்வரும் ஜனவரி முதல் நீர் கட்டணம் தொடர்பில் சூத்திரமொன்று அறிமுகப்படுத்தப்படும் என நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட சர்வதேச நீர் மாநாட்டின் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

கடந்த ஜனவரி மாதம் மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டதால் எமக்கு மேலதிக செலவீனங்களையும் ஏற்கவேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் கடந்த ஒகஸ்ட் மாதம் நீர் கட்டணம் மறுசீரமைக்கப்பட்டது. வைத்தியசாலை, பாடசாலை, வணக்கஸ்தலங்களுக்கு சலுகைகளை வழங்குவது தொடர்பிலும் நடவடிக்கை எடுக்கப்படும்.

தொழில் நிலையங்கள் மற்றும் வர்த்தக நிலையங்கள்மீதும் சுமையை திணிப்பதற்கு நாம் எதிர்பார்க்கவில்லை. இருந்தும் நிறுவனத்தை கொண்டுநடத்தக்கூடிய வகையில் சாதாரண விலை சூத்திரமொன்று அறிமுகப்படுத்தப்படும்.

செலவீனங்களை மட்டுப்படுத்துவது தொடர்பிலும் ஆராயப்படுகின்றது. ஆளணி பலம் மறுசீரமைப்பு, டிஜிட்டல் மயமாக்கல், புதுப்பிக்கத்தக்க சக்தி பயன்பாடு, நீர் வீண்விரயத்தை தடுத்தல், தனியார் துறையையும் இணைத்துக்கொள்ளல் போன்றன இவற்றில் பிரதானமானவை.

புதுப்பிக்கத்தக்க சக்தி பயன்பாட்டுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஏப்ரலில் நடவடிக்கை ஆரம்பமாகும். அத்துடன், சூரிய சக்தி பயன்பாட்டையும் 50 வீதம்வரை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அனைத்து மக்களுக்கும் சுத்தமான – பாதுகாப்பான குடிநீரை பெற்றுக்கொடுப்பதற்கு பொருளாதார நெருக்கடியும் தடையாக உள்ளது. எனவே, நிதி திரட்டுவதற்கான மாற்று வழிகள் பற்றியும் ஆராயப்படுகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles