ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதி டி-20 போட்டியில் சூர்யகுமார் யாதவ் 55 பந்துகளில் சதம் அடித்துள்ளார்.
இது சர்வதேச டி:20 கிரிக்கெட் அரங்கில் சூர்யகுமார் யாதவ் பெறும் 4 ஆவது சதம் ஆகும்.
இதன் மூலம் சூர்யகுமார் யாதவ், ரோஹித் சர்மா மற்றும் கிளென் மேக்ஸ்வெல்லுடன் இணைந்து டி:20 அரங்கில் அதிக சதம் விளாசிய வீரர் ஆனார்.