காலியின் பல பகுதிகளுக்கு இன்று காலை 8.00 மணி முதல் நள்ளிரவு 12.00 மணி வரை 16 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
காலி – ஹபுகல நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக நீர் விநியோகம் இடைநிறுத்தப்படவுள்ளது.
இதன்படி, போபே, பொத்தல, ஹபுகல, ஹபராதுவ, பூஸ்ஸ, அக்மீமன மற்றும் ரத்கம ஆகிய பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடைப்படவுள்ளதாக சபை தெரிவித்துள்ளது.