Wednesday, April 23, 2025
26 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஐஸ் போதைப்பொருளுடன் 'வெல்டிங் ருவன்' கைது

ஐஸ் போதைப்பொருளுடன் ‘வெல்டிங் ருவன்’ கைது

வெலிக்கடை பிரதான சிறைக்காவலரின் கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபரான ‘வெல்டிங் ருவன்’ என்பவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். .

சந்தேகநபர் கைது செய்யப்பட்ட போது அவரிடம் இருந்து 11 கிராம் 590 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் கூரிய ஆயுதங்கள் மீட்கப்பட்டதாக விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

அம்பலாங்கொட – கலகொடவத்தை – குளிகொட பிரதேசத்தில் நேற்று (14) இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

30 வயதுடைய சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

அண்மையில் இடம்பெற்ற வெலிக்கடை பிரதான சிறைக்காவலரின் கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் இவர் என்றும், அந்த வழக்கில் தற்போது அவர் பிணையில் வெளிவந்துள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles