Saturday, January 17, 2026
23.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஉடவளவ நீர்த்தேக்கத்தின் மேலாக செல்லும் வீதி மூடப்படுகிறது

உடவளவ நீர்த்தேக்கத்தின் மேலாக செல்லும் வீதி மூடப்படுகிறது

உடவளவ நீர்த்தேக்கத்தின் பிட்டபான பகுதியில் முன்னெடுக்கப்படவுள்ள அத்தியாவசிய திருத்த பணிகள் காரணமாக அந்த நீர்த்தேக்கத்திற்கு மேலாக செல்லும் வீதி இன்று முதல் மூடப்படவுள்ளது.

எதிர்வரும் 22ஆம் திகதி வரை குறித்த வீதி மூடப்பட்டிருக்கும் என்று மகாவலி அதிகார சபை அறிவித்துள்ளது.

எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் ஜனவரி மாதம் 6ஆம் திகதி வரை குறித்த வீதியின் ஒரு மருங்கு மாத்திரம் திறக்கப்படும் என்று அந்த சபை குறிப்பிட்டுள்ளது.

அதனை தொடர்ந்து ஜனவரி மாதம் 7ஆம் திகதி முதல் ஜனவரி மாதம் 14ஆம் திகதி வரை மீண்டும் வீதி முற்றாக மூடப்படவுள்ளது.

ஜனவரி 15ஆம் திகதி வீதி முற்றாக திறக்கப்படும் என்று மகாவலி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக குறித்த வீதியின் ஊடக பயணிக்கும் சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles