2010 ஆம் ஆண்டு, ஒருவரை சட்டவிரோதமாக தடுத்து வைத்தமை தொடர்பில் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சம்பந்தப்பட்ட மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டிருந்த அப்போதைய பொலிஸ் அத்தியட்சகர் தேஷபந்து தென்னகோன் உட்பட மூன்று அதிகாரிகளுக்கு, அவர்களின் தனிப்பட்ட பணத்திலிருந்து தலா 05 இலட்சம் ரூபாவை நஷ்டஈடாக வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாதுக்க பிரதேசத்தைச் சேர்ந்த ரஞ்சித் சுமங்கல என்பவர் சமர்ப்பித்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
துரைராஜா தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.