குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவுக்கு உடனடியாக போதிய பாதுகாப்பை வழங்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
உயிருக்கு அச்சுறுத்தல் உள்ள தமக்கு போதிய பாதுகாப்பை வழங்குமாறு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு உத்தரவிடுமாறு கோரி குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர தாக்கல் செய்த ரிட் மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதிபதிகளான நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் விக்கும் களுஆரச்சி ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.