Friday, July 18, 2025
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுயாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த நடிகை ரம்பா

யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த நடிகை ரம்பா

யாழ்ப்பாணத்திற்கு தனது குடும்பத்துடன் வருகை தந்த நடிகை ரம்பா, மானிப்பாய் மருதடி பிள்ளையார் கோயிலில் விசேட வழிபாடுகளில் ஈடுபட்டார்.

நடிகை ரம்பாவின் கணவர் இந்திரகுமார் பத்மநாதன் யாழ்ப்பாணம் மானிப்பாயை பூர்வீகமாக கொண்ட கனடா முதலீட்டாளராவார்.

இவரின் முயற்சியாக யாழ்ப்பாணத்தில் நொதேர்ன் யுனி (Nothern uni) தனியார் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

நொதேர்ன் யுனியின் அனுசரனையில் டிசம்பர் 21ம் திகதி யாழ்ப்பாணம் முற்றவெளியில் தென்னிந்திய பாடகர் ஹரிஹரன் பங்கேற்கவுள்ள பிரம்மாண்டமான இலவச இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

மானிப்பாய் மருதடி விநாயகர் தேவஸ்தானத்தின் விசேட கிரகப்பிரவேசம் நிகழ்வில் பங்கெடுப்பதற்காகவே அவர் இன்று இவ்வாறு ஆலயத்திற்கு வருகை தந்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles