கஹவத்தை – வெலேவத்தை பகுதியிலுள்ள வீடொன்றில் பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த பெண் தனது மகளுடன் வசித்துள்ள வந்துள்ள நிலையில், மகள் நேற்று (13) மதியம் வேலைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிய போது தாய் வீட்டுக்குப் பின்னால் இரத்தக் காயங்களுடன் இருப்பதை அவதானித்துள்ளார்.
இதுகுறித்து மகள் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதுடன், 71 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.