குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் ஊழியர்கள் திடீர் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
இதன் காரணமாக அதன் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் மேலதிக கட்டுப்பாட்டாளர் நாயகத்தை நீக்குமாறு கோரி இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
இதன் காரணமாக கடவுச் சீட்டு பெறுகை உள்ளிட்ட சேவைகளுக்காக வந்திருந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.