இலகு ரயில் திட்டத்தை மீள ஆரம்பிப்பது தொடர்பாக ஜப்பான் அரசாங்கத்துடன் மேலதிக கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருவதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
டிசம்பர் 31, 2020 அன்று ரத்து செய்யப்பட்ட இந்தத் திட்டத்தின் ஆரம்பப் பணிகள் 2019 ஏப்ரலில் தொடங்கப்பட்டன.
அதற்காக 22 ஹெக்டேயர் காணி அடையாளம் காணப்பட்ட போதிலும், அதற்கான இழப்பீடுகள் இதுவரையில் வழங்கப்படவில்லை என அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
கொரோனா தொற்றுநோய் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக, மதிப்பிடப்பட்ட தொகையை விட அதிக செலவு செய்ய வேண்டியுள்ளதாக கூறப்படுகிறது.