மஹியங்கனை – பொலன்னறுவை வீதியில் நேற்று (13) பிற்பகல் ஆண் குழந்தையின் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கிராதுருகோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.
அலுத்தயம பகுதியில் இராணுவ பேருந்து நிலையத்திற்கு அருகில் குழந்தையின் சடலம் ஒன்று இருப்பதாக கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய அவ்விடத்திற்கு சென்ற பொலிஸார், குறித்த சடலத்தை மீட்டுள்ளனர்.
சடலத்திற்கு அருகில் ஒரு கறுப்பு துப்பட்டாவும் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் மஹியங்கனை ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பிறந்து ஒரு நாளே ஆன சிசுவின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.