நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையால் சர்வதேச நீர் மாநாடு நிகழ்வு இன்று நடைபெற்றது.
இரத்மலானையில் அமைந்துள்ள நீர் மற்றும் சுகாதாரத்திற்கான மேம்பாட்டு மைய மண்டபத்தில் ‘நீர் மற்றும் சுகாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்கான மாற்றத்தை துரிதப்படுத்துதல்’ எனும் தொனிப்பொருளின் கீழ் இந்த நிகழ்வு நடைபெற்றது.
நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் நீர்வழங்கல் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த, உலக வங்கியின் உலக நாடுகளுக்கான பணிப்பாளர் சரோஜ் குமார் ஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.