Monday, November 18, 2024
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபுலமைப்பரிசில் பரீட்சையை எளிதாக்க திட்டம்

புலமைப்பரிசில் பரீட்சையை எளிதாக்க திட்டம்

எதிர்வரும் ஆண்டு முதல் தற்போதுள்ள கல்வி முறையில் பல பாரிய மாற்றங்கள் செய்யப்படவுள்ளதாகவும், தற்போதைய நிலைமையை விட 5ம் தர புலமைப்பரிசில் பரீட்சையை இலகுவாக்க எதிர்பார்த்துள்ளதாகவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

இதன்போது மாணவர்களின் எழுத்தறிவு மற்றும் எண்ணியல் திறன்களை அளவிடுவதற்கு முன்னுரிமை வழங்கப்படும்.

2023 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் அதிகூடிய சித்திகளைப் பெற்ற மாணவர்கள் மற்றும் கல்விப் பொதுச் சான்றிதழ் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களின் மதிப்பீட்டு வைபவத்தில் கலந்துகொண்ட போது அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

அத்துடன், எதிர்காலத்தில் பரீட்சையில் 100 வீத சித்திகளைப் பெற்றதன் அடிப்படையில் மாணவர்கள் மதிப்பீடு செய்யப்படமாட்டார்கள் என அவர் குறிப்பிட்டார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles