இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் போல் ஸ்டீவன்ஸ் மற்றும் பாதுகாப்பு செயலாளர் நாயகம் கமல் குணரத்ன ஆகியோருக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
சட்டவிரோத குடியேற்றங்களை தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகளை அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் இதன்போது பாராட்டியுள்ளார்.
அத்துடன், குறித்த கலந்துரையாடலில் சட்டவிரோத கடல் மார்க்க கடத்தல் மற்றும் சர்வதேச குற்றங்களை ஒடுக்குவது என்பன குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.