ஹிங்குரக்கொட – ஹதமுன பிரதேசத்தில் உள்ள சிறுவர் காப்பகத்தில் தங்கியிருந்த மூன்று சிறுமிகள் நேற்று நண்பகல் 12 மணியளவில் தப்பிச் சென்றுள்ளனர்.
மூன்று சிறுமிகளும் தப்பி சென்ற வேளையில் பொலிஸாரால் 3 சிறுமிகளும் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
சிறுமிகள் மூவரும் தற்போது பொலிஸாரின் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும், இது தொடர்பில் சிறுவர் இல்ல காப்பாளருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சிறுவர் இல்லம் நன்னடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்பு திணைக்களத்திற்கு சொந்தமானது என கூறப்படுகிறது.