மாத்தளை – ஹுலங்கமுவ பிரதேசத்தில் குளவி கொட்டியதில் 14 பேர் மாத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்கள் 30 வயதுக்கும் 61 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
இறந்த நபரை அடக்கம் செய்வதற்காக கிராம மக்கள் மயானத்தை சுத்தம் செய்து கொண்டிருந்த போது, மரத்தில் குளவி கூடு ஒன்று கிளறியதில், குளவிகள் அங்கிருந்தவர்களை கொட்டியது.
அவர்கள். அனைவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், 06 பேர் சிகிச்சை முடிந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.