வேதாளை கடற்கரையில் இருந்து நாட்டுப்படகில் இலங்கைக்கு நேற்று (12) கடத்த முயன்ற சுமார் ஒரு இலட்சம் வலி நிவாரணி மாத்திரைகள் இந்திய கடலோர காவல்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்திய கடலோர காவல் படை வீரர்களை கண்டதும் படகில் இருந்தவர்கள் கடலில் குதித்து தப்பி சென்றுள்ளதுடன், படகுடன் வலி நிவாரணி மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
பறிமுதல் செய்யப்பட்ட வலி நிவாரணி மாத்திரைகள் போதை மாத்திரைகளாக இலங்கையில் பயன்படுத்தப்படுவதற்காக கொண்டு செல்லப்பட்டதாகவும் 8 இலட்சம் ரூபா ( இந்திய நாணய மதிப்பு) என மதிப்பிடப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.