Saturday, March 15, 2025
27 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇரத்த பரிசோதனைக்காக வந்த நபருக்கு எயிட்ஸ்

இரத்த பரிசோதனைக்காக வந்த நபருக்கு எயிட்ஸ்

இலவச இரத்த பரிசோதனை திட்டத்தின் மூலம் இரத்த பரிசோதனை செய்ய வந்த நபருக்கு எயிட்ஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

உலக எயிட்ஸ் தினத்தை முன்னிட்டு கண்டி மத்திய சந்தைக்கு முன்பாக இரத்த பரிசோதனை நடத்தப்பட்டது.

அதற்கு 386 பேர் இரத்த பரிசோதனைக்காக வருகை தந்திருந்தாக கூறப்படுகிறது. இதன்போது Syphilis நோயால் பாதிக்கப்பட்ட ஒருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட இரத்த மாதிரிகளின் அறிக்கைகள் சில நாட்களுக்குப் பிறகு கிடைக்கப்பெறும் என்பதால், சம்பந்தப்பட்ட அனைத்து நபர்களின் தகவல்களைப் பாதுகாத்து எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட நபரை உடனடியாக அழைத்துச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

கண்டி மாவட்டத்தில் 1991 ஆம் ஆண்டு முதல் இவ்வருடம் செப்டம்பர் மாதம் வரை 303 எயிட்ஸ் நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். அவர்களில் ஆண்கள் 208 பேரும், பெண்கள் 81 பேரும் உள்ளனர்.

இந்த நோயாளர்களில் 15 வயதுக்குட்பட்ட 10 ஆண்களும் 04 பெண்களும் உள்ளதாக வைத்தியர் லத்தீப் தெரிவித்தார்.

இந்த வருடத்தில் கண்டி மாவட்டத்தில் 31 எயிட்ஸ் நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

அத்துடன்இ குறித்த காலப்பகுதியில் எயிட்ஸ் நோயாளர்கள் இருவர் உயிரிழந்துள்ளதாக கண்டி STD மற்றும் எயிட்ஸ் கட்டுப்பாட்டுப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles