Wednesday, May 6, 2026
30 C
Colombo
வடக்குயாழில் ஊடகவியலாளருக்கு கொலை அச்சுறுத்தல்

யாழில் ஊடகவியலாளருக்கு கொலை அச்சுறுத்தல்

யாழ்ப்பாணம் – கல்வியங்காட்டில் உள்ள ஊடகவியலாளர் ஒருவரின் வீடு புகுந்து சுமார் இருபதுக்கும் மேற்பட்ட இனந்தெரியாதோர் கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.

இச் சம்பவம் நேற்று (11) மாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

போதைப்பொருள் கடத்தல்காரர்கள் தொடர்பான செய்தி ஒன்று இணையத்தள ஊடகம் ஒன்றில் வெளியானதாகவும் அந்தச் செய்தியை உடனடியாக இணையத்தளத்திலிருந்து அகற்றும்படி கூறியே இனந்தெரியாதோர் குறித்த ஊடகவியலாளருக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

2 முச்சக்கர வண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் வந்தவர்கள் ஊடகவியலாளர் மற்றும் குடும்பத்தினர் மீது தாக்குதல் மேற்கொள்ள முயன்ற போது வீதியில் சென்றவர்கள் திரண்டதால் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.

முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிள்களில் வந்தவர்களில் 6 பேர் கொண்ட பெண்கள் குழுவும் இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இச் சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles