ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் தன் கைவசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் நபர் ஒருவர் மஹியங்கனை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர்.
மஹியங்கனை பொலிஸ் பிரிவில் மஹியங்கனை பொலிஸாரினால் சுற்றிவளைப்பொன்று முன்னெடுக்கப்பட்டது.
ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருளை தன் கைவசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் 32 வயதுடைய குருகம்மான மஹியங்கனை பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் மஹியங்கனை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபரிடம் இருந்து 6050 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளும் 1400 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளும் மஹியங்கனை பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.
குறித்த சந்தேக நபரிடம் விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர்.