Tuesday, March 18, 2025
24 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபதுளை – கொழும்பு வீதியில் பயணிப்போருக்கான அறிவிப்பு

பதுளை – கொழும்பு வீதியில் பயணிப்போருக்கான அறிவிப்பு

பதுளை – கொழும்பு வீதியின் உடுவர 6 ஆம் கட்டை பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

இதனால், கனரக வாகனங்கள் செல்வதற்கான வீதியை இன்று (11)முதல் மூடுவதற்கு பதுளை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தீர்மானித்துள்ளது.

கடந்த சில நாட்களில் பெய்து வரும் அடைமழை காரணமாக பதுளை மாவட்டத்தின் பல பகுதிகளில் நிலச்சரிவு அபாயம் உள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

இதன்படி, ஹாலிஎல பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட உடுவர பிரதேசத்தில் பல இடங்களில் நிலவும் அபாயகரமான நிலைமைகளை கருத்திற்கொண்டு உடுவர 6 ஆம் கட்டை பிரதேசத்தின் ஊடாக பஸ்கள் உட்பட கனரக வாகனங்கள் செல்வதற்கான வீதியை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எனவே, மாற்றுப் பாதையாக அடம்பிட்டிய பண்டாரவளை வீதியை பயன்படுத்துமாறும் பொலிஸார் சாரதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles