Friday, June 26, 2026
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபங்களாதேஷ் தம்பதியிடம் கொள்ளையடித்த இருவர் கைது

பங்களாதேஷ் தம்பதியிடம் கொள்ளையடித்த இருவர் கைது

இலங்கைக்கு சுற்றுலா வந்த பங்களாதேஷ் தம்பதியரிடம் கிருலப்பனை பிரதேசத்தில் கொள்ளையடித்த இரு சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பெண்ணின் கழுத்தில் இருந்த தங்க நகை மற்றும் மூன்று பென்டன்ட்களை அவர்கள் திருடியிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

பின்னர், சந்தேகநபர்கள் கொள்ளையடிக்கப்பட்ட தங்கப் பொருட்களை செட்டியார் தெரு பகுதியில் உள்ள நகைக்கடை வியாபாரி ஒருவருக்கு விற்பனை செய்து இரு இலட்சத்து இருபத்தைந்தாயிரம் ரூபாவை பெற்றுள்ளனர்.

இந்த கொள்ளைச் சம்பவம் அங்குள்ள பாதுகாப்பு கெமராவில் பதிவாகியிருந்த நிலையில், பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles