நமுனுகுல – பூட்டாவத்த பகுதியில் நீராட சென்ற இளைஞன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் மொனராகலை- அலியாவத்த பகுதியைச் சேர்ந்த 17 வயதுடையவரென தெரிவிக்கப்படுகிறது.
தமது உறவினர் வீட்டுக்கு சென்றிருந்த அவர், மேலும் இரண்டு இளைஞர்களுடன் அந்த பகுதியிலுள்ள நீரோடையொன்றில் நேற்று முற்பகல் நீராடச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போதே, அவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.