தபால் தொழிற்சங்கங்கள் நேற்று (10) ஆரம்பித்த அடையாள வேலை நிறுத்தம் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகிறது.
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் நேற்று (10) மாலை 04 மணியளவில் இந்த பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்துள்ளனர்.
இந்த பணிப்புறக்கணிப்பு 48 மணிநேரம் நீடிக்கும் என தபால் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
கண்டி, நுவரெலியாவில் உள்ள தபால் நிலையங்களை விற்பனை செய்ய தயாராகின்றமை, 20,000 ரூபா சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட பல பிரச்சினைகளை முன்வைத்து அவர்கள் இந்த பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்துள்ளனர்.