Monday, August 18, 2025
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட 22 இலட்சத்து 80 ஆயிரம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவரை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் இன்று (11) காலை கைது செய்துள்ளனர்.

கம்பளை புஸ்ஸல்லாவ பிரதேசத்தை சேர்ந்த 55 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

டுபாயில் இருந்து ஓமான், மஸ்கட் நகருக்கு வந்த அவர், அங்கிருந்து Slam Air விமானம் OV-437 மூலம் இன்று (11) அதிகாலை 03.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.

இவர் கொண்டு வந்த இரண்டு சூட்கேஸ்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 22,800 வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரெட்டுகள் அடங்கிய 114 பெட்டிகளை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று (11) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles