சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட 22 இலட்சத்து 80 ஆயிரம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவரை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் இன்று (11) காலை கைது செய்துள்ளனர்.
கம்பளை புஸ்ஸல்லாவ பிரதேசத்தை சேர்ந்த 55 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
டுபாயில் இருந்து ஓமான், மஸ்கட் நகருக்கு வந்த அவர், அங்கிருந்து Slam Air விமானம் OV-437 மூலம் இன்று (11) அதிகாலை 03.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.
இவர் கொண்டு வந்த இரண்டு சூட்கேஸ்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 22,800 வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரெட்டுகள் அடங்கிய 114 பெட்டிகளை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று (11) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.